தவறுகள் பிறர் அறியாதவரை
யாவரும் நல்லவரே...
Wednesday, January 23, 2008
Sunday, January 13, 2008
மெட்டுக்கேத்த பாடல்
நீண்ட நாட்களுக்கு முன்பு, 5 வருடங்கள் இருக்கும் என்றே எண்ணுகிறேன். ஒரு இசை அமைப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் இனிய மெட்டுக்கு நான் எழுதிய பாடல் இது.. உங்களின் காரசாரமான விவாதங்கள் வரவேற்க்கப் படுகின்றன.
விழியோரம் மொழிபேசும் அழகோவியம் கண்டு
குயில் பாட மறந்தாளோ பெண்ணே...
நதியோரம் நடைபோடும் ஒய்யாரம் கண்டு
நதி ஓட மறந்தாளோ கண்ணே...
முகம் மறந்தது போல்
நிழல் தொலைந்தது போல்
முகம் மறந்தது போல் - என்
நிழல் தொலைந்தது போல்
என்னுள் ஒரு புது மாற்றம் கண்டேன் - அது
உன்னால் என முடிவாகக் கொண்டேன். - விழியோரம்.....
உன்னோடு தூங்கும் இருளாக வேண்டும்
விழிக்கின்ற போதும் ஒளியாக வேண்டும்
குளிக்கின்ற போதும் நீராக வேண்டும்
துடைக்கின்ற போதும் துகிலாக வேண்டும்
நெளிவின்றி நதியா?ஸ்ருதியின்றி இசையா?
நீயின்றி நான் வாழ்வேனா?
நீ சொல்லு பெண்ணே
நான் உந்தன் கண்ணே. - விழியோரம்.....
காற்றின் ஒலி கேட்டு செவியாக வேண்டும்
கீற்றின் ஒளி காண விழியாக வேண்டும்
என் சோகம் தீர்க்கும் விரலாக வேண்டும்
காலத்தின் நிறம் காண நீ என்றும் வேண்டும்
பூவின்றி தேனா?'ழ' இன்றி தமிழா?
நீயின்றி நான் வாழ்வேனா?
நீ சொல்லு பெண்ணே
நான் உந்தன் கண்ணே. - விழியோரம்.....
- விபாகை
விழியோரம் மொழிபேசும் அழகோவியம் கண்டு
குயில் பாட மறந்தாளோ பெண்ணே...
நதியோரம் நடைபோடும் ஒய்யாரம் கண்டு
நதி ஓட மறந்தாளோ கண்ணே...
முகம் மறந்தது போல்
நிழல் தொலைந்தது போல்
முகம் மறந்தது போல் - என்
நிழல் தொலைந்தது போல்
என்னுள் ஒரு புது மாற்றம் கண்டேன் - அது
உன்னால் என முடிவாகக் கொண்டேன். - விழியோரம்.....
உன்னோடு தூங்கும் இருளாக வேண்டும்
விழிக்கின்ற போதும் ஒளியாக வேண்டும்
குளிக்கின்ற போதும் நீராக வேண்டும்
துடைக்கின்ற போதும் துகிலாக வேண்டும்
நெளிவின்றி நதியா?ஸ்ருதியின்றி இசையா?
நீயின்றி நான் வாழ்வேனா?
நீ சொல்லு பெண்ணே
நான் உந்தன் கண்ணே. - விழியோரம்.....
காற்றின் ஒலி கேட்டு செவியாக வேண்டும்
கீற்றின் ஒளி காண விழியாக வேண்டும்
என் சோகம் தீர்க்கும் விரலாக வேண்டும்
காலத்தின் நிறம் காண நீ என்றும் வேண்டும்
பூவின்றி தேனா?'ழ' இன்றி தமிழா?
நீயின்றி நான் வாழ்வேனா?
நீ சொல்லு பெண்ணே
நான் உந்தன் கண்ணே. - விழியோரம்.....
- விபாகை
Subscribe to:
Posts (Atom)