Wednesday, July 26, 2006

'இமைப்பொழுது' - இமை - 14

'இமைப்பொழுது' - இமை - 14

********** ஷாட் 0027 ************

'வாங்க சார், நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம் சார், உள்ள வாங்க சார், உங்க கையால இந்த குத்து விளக்க ஏத்தி வைங்க சார்'
புன்னகையுடன் உள்ளே நுழைந்தார் ராகவன். ரீமாசென் போல தோற்றம் கொண்ட பெண்ணொருத்தி அவரிம் மெழுகுவர்த்தியை நீட்ட, அவளின் கரத்தை தழுவிய படியே வாங்கி தீபம் ஏற்றினார்.
விளக்கேற்றி திரும்பிய ராகவனை வரவேற்றது ஓர் இரும்புக்கரம்......
அது திலீப்குமார்.
' என்ன மிஸ்டர் ராகவன், நலமா?' என்றபடி கைகுலுக்கிய போது சிறு நடுக்க்த்தை உணர்ந்தார்.
'ஓ நல்லா இருக்கேன் இன்ஸ்பெக்டர், நீங்க எப்படி இருக்கீங்க?' என்றார் சமாளித்த படி.
'உங்களப் போல சில நல்லவர்கள் எல்லாம் எனக்கு சப்போட்ட இருக்குறப்போ எனக்கென்ன ராகவன்' என்ற திலீப் குமாரை பார்த்து சிரித்தார் ராகவன்.
' அப்புறம் ராகவன், உங்கள நான் ரொம்ப நாளா பார்த்து ஒரு உதவி கேட்கணம்னு நினைத்துக்கிட்டே இருந்தேன்'
'சொல்லுங்க இன்ஸ்பெக்டர், உங்களுக்கு பண்ணாம வேற யாருக்குப் பண்ணப் போறேன், சொல்லுங்க.'
' எனக்கு தெரிஞ்ச பொண்ணு, பேரு ப்ரியா, செகரட்டரிஷிப் கோர்ஸ் பண்ணியிருக்கா, உங்க ஆபீஸ்ல ஒரு வேல போட்டுக் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்'
' அதுக்கென்ன நாளைக்கே வரச்சொல்லுங்க, என்னோட பெர்சனல் செகரட்டரியா வச்சிக்கிறேன்'
'ஓ, ரொம்ப தேங்க்ஸ், இவ்வளவு சீக்கிரமா வேல முடியும் அப்படின்னு நான் நினைக்கவே இல்ல'.
'இதுக்கெல்லாம் என்ன சார் தேங்க்ஸ், நான் உங்களுக்கு பண்ண மாதிரி நீங்க எனக்கு எப்பவாவது உதவ மாட்டீங்களா என்ன' என பிஸினஸ்மேன் பாலிசியில் பேசினார்.
'சரி நாளை காலைல உங்க ஆபீஸ்க்கு அனுப்பி வைக்கிறேன், ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, அப்புறம் சந்திக்கிறேனே' என்ற படி கிளம்பினார் திலீப்குமார்.
'சார், எங்களோட சின்ன அன்பளிப்பு நம்ம ஐஸ்வர்யா பாப்பாவுக்காக' என ஒரு மூன்று பட்டுச்சேலைகளை கொடுத்த கடைக்காரரிடம், இரண்டு 100 ரூபாய் கட்டை திணித்து விட்டு விடைபெற்றார், ராகவன்.

********** ஷாட் 0028 ************

செல்லிட பேசி சினுங்கிட, கையிலெடுத்த ப்ரியா, 'ஹாய் டார்லிங், என்ன காலைல இருந்து போனே பண்ணல' என்றார்.
'அதான் இப்ப பண்ணீட்டன்ல' என்ற திலீப்குமார் 'ப்ரியா, நீ நாளையிலிருந்து ராகவனோட பெர்சனல் செகரட்டரியா வேலைக்குப் போற' என்றார்.
'அய்யோ, என்னடா இது வம்புல மாட்டிவுடுற, அவன் ஒரு ஜொல்லுப்பார்ட்டின்னு நான் கேள்விப் பட்டிருக்கேன், அவன் ஆபீஸ்ல அதுவும் பெர்சனல் செகரட்டரியாவா? நோ சான்ஸ்'
'ப்ரியா, அதனால தான் நான் உன்ன அனுப்புறேன்'
'நீ யாரையும் ஈசியா சமாளிச்சிடுவ..... அப்புறம் அவங்க உன் கைப்பொம்மையா மாறிடுவாங்க.... ஆனா நீ மட்டும் அப்படியே மிஸ்,ப்ரியாவா இருப்ப.... ப்ளீஸ், ஒத்துக்க டியர்'
'சரி சரி நாளைக்கு காலைல போறேன், ஆனா அவன் அளவுக்கு மீறினா அப்புறம் நீ தான் டியர் அவனோட கொலைக் கேசையும் டீல் பண்ண வேண்டி வரும், சரியா' என்றாள் சிரித்த படி.....
' ஓகே, பை'
********** ஷாட் 0029 ************
காலையில் அலுவலகம் கிளம்பும் போது ராகவனின் வேலைக்காரனிடம், 'ஏய், அந்த டெண்டர் பைல் எங்க' என்றவரிடம், 'இந்த..... இங்க தான் இருக்கு, பேசாம ஒரு செக்டரி வெச்சா என்னவா' என்றான் வேலைக்காரன். முப்பது வருசமா வேல பார்க்கிறான், அவரிடம் அவனுக்கு கொஞ்சம் உரிமை அதிகம் தான்.
'அது செக்டரி இல்லடா, செகரட்டரி' என்றார்.
'அது என்னவோ, புரிஞ்சா சரி' என்றபடியே சென்றான்.
அப்போ தான் அவருக்கு திலீப்குமார் கூறிய ப்ரியாவின் நினைப்பு வந்தது.
காரில் செல்லும் போது அவருக்கு ப்ரியாவின் நினைப்பு தான்.
சினேகா முதல் நமிதா வரை அனைவரும் அவர் கண்முன் வந்து சென்றார்கள்.

********** ஷாட் 0030 ************

அலுவலகத்தின் வாசலில் இறங்கி அவரின் அறைக்குச் சென்ற ராகவனுக்கு உள்ளே ஒரு அதிர்ச்சிக் காத்திருப்பது தெரியாது.....
அது என்ன?

- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர் : விபாகை

Wednesday, July 19, 2006

'இமைப்பொழுது' - இமை - 13


'இமைப்பொழுது' - இமை - 13


ஆம்புலன்ஸ் ஒலி எழுப்பிக் கொண்டே வந்து பாடியை அள்ளிக் கொண்டு சென்றது.
'மீண்டும் ஒரு தலைவலி என்றவாறே ஜீப்பில் ஏறிப் பறந்தார், இன்ஸ்பெக்டர்.
இவை அனைத்தையும் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம். விழியில் பயத்துடன் ஒளிந்து கொண்டிருந்தது பத்ரியின் தோள் மீது ஒரு கை பட, திடுக்கிட்டுத் திரும்பினான்.
' என்ன பத்ரி, போலீஸ் அது இதுன்னு ஒரே பரபரப்பாக இருக்கு' ஒண்ணும் தெரியாதவனாய் குமார் விசாரிக்க, கண்ணில் கோபத்துடன் குமாரை முறைத்தான் பத்ரி.
' என்னடா, வெவரம் என்னென்னா என்ன மொறக்கிற'
'எல்லாம் உன்னால தான், சரி அப்புறம் பேசலாம், மொதல்ல இங்கயிருந்து கிள்ம்புவோம்.'
'ஏய், நீ அவசரப் படுறதப் பார்த்தா, நீயே கொலை செஞ்சிருப்ப போல இருக்கு?' என்ற குமாரை மீண்டும் ஒரு முறை முறைத்து வண்டில் ஏறி 'உட்காருடா' என்றான் வெறுப்பாக.


********** ஷாட் 0025 *************


'கொடைக்கானல்'
அழகிய வெள்ளை நிற 'சுவராஜ் மஸ்டா' கோடை ஏரிக்கரையில் வந்து நின்றது,
கதவைத் திறந்து கொண்டு வண்ண வண்ண தேவதைகள் துள்ளிக் குதித்து இறங்கினர். கோடை குளிரில் நனைந்த வாலிப உள்ளங்கள் அவர்களைக் கண்டு வாழ்த்து இசைத்தனர். பழகிய தேவதைக் கூட்டம் கண்டு கொள்ளாது சென்றனர்.
இறுதியாக கீழே இறங்கிய ஐஸ்வர்யாவைப் பார்த்து அந்த ஏரி கூட உடல் சிலிர்த்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஐஸ்வர்யா காலை தரையில் வைத்தவுடன்..
'பீப் பீப்......பீப் பீப்......'
செல்லிட பேசியில் செய்திக்கான அறிகுறி. 'யாராஇருக்கும்?' கேள்வியோடு பார்க்க, அதில்


' உன் கால் பட்ட இடங்களில்
என் கரம் தொட்டுக் காக்க
வரம் கொடு.'

- விழியன்


மீண்டும் அவளிடத்தில் ஓர் கேள்வி, 'யார் இந்த விழியன்?' நின்று விழித்த ஐஸ்வர்யாவை அவள் தோழி ரூபா காதில் காற்றூதிக் கலைத்தாள்.
' என்னடி கொடைக்கானல கால் வச்சவுடன் அப்படியே திகைச்சுப் போயிட்ட? ம்.'
தனது செல்லிடபேசியில் செய்தியை அவளிடம் காண்பிக்க 'அப்படிப் போடு, அது தான் சங்கதியா? யாருடி இந்த விழியன்? எனக்குத் தெரியாம?' என்ற ரூபாவை முறைத்த ஐஸ்
'அவன் இங்க எங்கேயோ இருக்கணும், இல்லைனா எப்படி நான் கீழே கால் வச்சதும் மெசேஜ் அனுப்புவான் ' என்றவாறு சுற்றி சுற்றி பார்க்க, மீண்டும்
'பீப் பீப்......பீப் பீப்......'
செல்லிட பேசியில் செய்திக்கான அறிகுறி.


'விழிகளால் தேடாதே
விழியனை,
மொழிகள் பேசிட
வழிகள் பிறக்கும்'


- விழியன்


'ஆஹா.......நம்ம ஐஸ் அக்கா மாட்டிக்கிட்டாளா?' நண்பர்கள் கூட்டம் கிண்டலடிக்க,
அச்சம் கலந்த புன்னகை, லேசான கோபம், அவமானம் அனைத்தும் அவள் விழிகளில்.


- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர் : விபாகை

Tuesday, July 18, 2006

'இமைப்பொழுது' - இமை - 12

'இமைப்பொழுது' - இமை - 12
********** கட் 0021 ஷாட் மாத்துப்பா *************

'தட தட தட தட தட தட தட தட தட தட' தலைதெறிக்க ஓடி வந்த முத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ' டேய், டேய், அங்க ஒருத்தனை அடிச்சேக் கொன்னுட்டான் நம்ம குமார்டா.'
' என்னடா சொல்ற'
' ஏய் நிஜமாவா?'
' மெய்யாலுமாடா?'
நண்பர்கள் ஆளுக்கொருவராய் கேட்க, பேச முடியாத முத்து, ' ஆமா, என்பது போல் தலையசைத்து தலை குனிந்து மூச்சு வாங்கினான்..
எங்கடா? என்றவாறு முத்து வந்த திசையை நோக்கி ஓடினான் பத்ரி.
ஆள் ஆரவாரமற்ற அந்த முச்சந்தியில் ஒருவன் தரையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்க, குமார் தனது காரில் ஏறிச் சென்றி விட்டான்.
ஓடிச் சென்ற பத்ரி கீழே விழுந்தனைத் திரும்பிப் பார்த்து அதிர்ந்தான்..
அது.........

********** கட் 0022 ஷாட் மாத்துப்பா *************

'டாட் எங்க காலேஜ்ல நாங்க டூர் போறாம், எனக்கு ஒரு 10,000 ருபீஸ் வேணும் டாட்.'
'வாவ், 10000 ருபீஸ் என்னடா 20000 ருபீஸ் தர்றேன், ஆனா நீ மட்டும் டூர் போகமா என் கூட இருந்திருடா'
'டாட், போங்க டாட், என்ன எங்கேயுமே விட மாட்டீங்கிறீங்க, இல்ல டாட் நான் கண்டிப்பா போவேன்'.
'ஓகே, எத்தனை நாள்?'
'3 டேஸ் டாட்'
'அய்யோ, 3 டேஸ்ஸா..... உன்னை பாக்காம ஒரு நாள் இருக்குறதே கஷ்டம், அதுவும் 3 டேஸ்னா, எப்படிடா?...'
'டாட் ப்ளீஸ் டாட், ப்ளீஸ்......'
'ஒகே...ஓகே'
'ஸ்வீட் டாட்' என்றவாறே ராகவனுக்கு முத்தம் கொடுத்து விட்டு சிட்டாய் பறந்தாள் ஐஸ்வர்யா.

********** கட் 0023 ஷாட் மாத்துப்பா *************

'ஸார், நம்ம மூணாவது முக்கிய வீதியில் ஒரு பிணம் கிடக்குது சார்' கான்ஸ்டபிள் 302, இன்ஸ்பெக்டரிடம் கூற, போன மாத ரேப் கேஸ் பைலை பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சலிப்புடன் நிமிர்ந்து,
யாரது? வயது என்ன இருக்கும்? சரி சரி வாங்க போயி பார்க்கலாம் என்றவாறு கிளம்பினார்.

********** கட் 0024 ஷாட் மாத்துப்பா *************

'போரன்சிக் லேப்க்கு சொல்லியாச்சாப்பா?, பாடிய போஸ்ட்மார்ட்டம் அனுப்பு, நேர்ல பார்த்த சாட்சி யாராவது இருக்காங்களா? என்றவாறே சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார்.
'இல்ல சார், யாரும் பாக்கலையாம்' என்றார் கான்ஸ்டபிள் 302.
ஆம்புலன்ஸ் ஒலியை எழுப்பிக் கொண்டே வந்து பாடியை அள்ளிக் கொண்டு சென்றது.
'மீண்டும் ஒரு தலைவலி என்றவாறே ஜீப்பில் ஏறிப் பறந்தார், இன்ஸ்பெக்டர்.
இவை அனைத்தையும் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம்.

- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர் : விபாகை

Friday, July 14, 2006

மரணத்தில் ???

எண்ணங்களின் மரணத்தில்
தெளிவு என்றாலும்
வார்த்தை வரம் பெறாவிடில்
வேண்டியன மருவலாம்
தேவைகளில் தேடலில்
மனிதன் தன்னை தேட
மறுத்தாலும்
தொலைந்தன கிடைக்கும்
ஏழு கடல் தாண்டி.
ஆனால்
மனிதனின் மரணத்தில் ???

Friday, July 07, 2006

'இமைப்பொழுது' - இமை - 11

'இமைப்பொழுது' - இமை - 11

SMS ஐ படித்த ஐஸ்வர்யாவிற்கு குழப்பம்.

'யார் இந்த விழியன்?'

'கவிதை என்ன சாப்பாட்ட பத்தி இருக்கு? பெயரப் பாத்தா பெரிய கவிஞராட்டம் இருக்கு... யாரு இது?' யோசித்த படி தூங்க ஆரம்பித்தாள் ஐஸ்வர்யா.

********** படப்பிடிப்பு தளத்தில் *************

1: என்னம்மா டைரடக்கரு, அஸிஸ்டண்ட்ஸ்லா கதக்குள்ள பூந்துகிறாங்க..... மவனே, நீயும் எங்கயாவது கதகுள்ள வந்த சும்மா கீசிறுவேன்.
2: அங்ஆங்க் அதானே, ஏதோ கொயந்த மனசு நம்ம விழியன் அண்ணாத்தேக்கு, அதான் ஒத்துக்கினு கம்முனுக்கீறேன். ஏன் கைல ராங்கு காட்ன .......
இயக்குனர்: (புலம்பலுடன்) பாருங்கடா, இந்த விழியன்னால நான் கண்ட கண்டவன் கிட்டயில்லாம் பேச்சு கேக்க வேண்டி இருக்கு. அது கூட பரவாயில்ல, அவன போயி குழந்தை மனசுன்றானுகளே......

********** கட் 00-- ஷாட் மாத்துப்பா *************

'டேய் கார்த்திக், உன் ஆள பத்தின விபரம் இந்தா வாங்கிக்க, ஆனா மறக்காம சாயந்திரம் பார்ட்டி தாஜ்ல தான், என்ன சரியா' என்றபடி கல்லூரிக்குள் நுழைந்தான் ஸ்டீவன்.

'தாஜ் என்ன, லீலாவிலேயே தர்றேன்'

பெயர் : ஐஸ்வர்யா
செல்லப் பெயர் : ஐஸ்சு, பப்லு
பிறந்த தேதி: 3 மார்ச் 1987
உயரம்:5'4"
அப்பா : ராகவன் - ஐஸ்வர்யா எக்ஸ்போர்ட்ஸின் மேனேஜிங் டைரக்டர்.
அம்மா : பாவம் போன வருசம் தான் போயி சேந்துட்டாங்க.
சகோதர சகோதரிகள் : அந்த மாதிரி வில்லி, வில்லன்கள் யாரும் இல்ல...
இது வரை வந்த சேதி: யாரையும் காதலிக்கவில்லை.
அவளுக்கு பிடித்தது : கவிதை, ரகுமானின் இசை, குழந்தைகள்
பிடிக்காதது: ஆணாதிக்கம், வறுமை

'அப்ப நம்ம கார்த்திக்கு ஏத்த ஆள் இல்லைன்னு, சொல்லு' கூட இருந்த மனோ ஒத்தூத.

கோபத்தில் மனோவை முறைத்தான் கார்த்திக்.

'அவ எனக்குத்தான், இத யார் தடுத்தாலும் விட மாட்டேன்' என்றபடியே ரஜினி ஸ்டைலில் சிகரெட்டை பத்த வைத்தான் கார்த்திக்.

- இமை இன்னும் திறக்கும்.

இயக்குனர் : விபாகை
உதவி (உபத்திரம்) இயக்குனர்கள்: லாவண்யா, விழியன், சிவா.....

Thursday, July 06, 2006

'இமைப்பொழுது' - இமை - 10

'இமைப்பொழுது' - இமை - 10

********** கட் 0017 ஷாட் மாத்துப்பா *************

'காபி சாப்பிடுங்க' என்றாள் கீதா, ரவிசுந்தரிடம்.

'இல்ல வேணாம்'

'சரி நான் தான் எதையும் மனசில வச்சுக்கலன்னு சொல்லீட்டேன்ல, அப்புறம் ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க...... தலை வலிக்குதா?' என்றாள் ரவிசுந்தரின் நெற்றியில் கை வைத்துக் கொண்டு.

திடீர் என குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான் ரவி,

' என்னைய மன்னிச்சிடு.. கீதா, மன்னிச்சிடு' என்றான் அவளைத் தழுவிக் கொண்டு.

மனம் கரைய அவள் கண்ணிலும் நீர்.

'க்கூக்கு... க்கூக்கு....' - அழைப்பு மணி ஒலித்தது,

சட்டென பிரிந்து, கண்ணீரை தனது துப்பட்டாவில் துடைத்தபடியே கதவைத் திறந்தாள்.

வாசலில் குமார்.

'சாரி... டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன், ரம்யா அவசரமா ஊருக்குப் போயிட்டா, யாரோ அவளோட சொந்தக்காரர் இறந்துட்டாராம். அதான் வீட்டுச் சாவியை கொடுத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். சாரி' என்றான் குமார்.

'அய்யோ, அதெல்லாம் ஒண்ணுமில்ல.... கொடுத்திட்டுப் போங்க', என்றாள் கீதா மலுப்பலாக.

' என்ன ரவிசுந்தர் சார்! ஆபிஸ்க்குப் போகலையா?, நான் வாரேன்', என்று எந்த பதிலுக்கும் காத்திராமல் கிளம்பினான்.

கதவைச் சாத்திட்டு திரும்பிய கீதாவின் கன்னத்தில் 'நச்சென்று' முத்தமிட்டு, சிரித்தபடி 'நானும் ஆபிஸ் கிளம்புறேன்' என்று சென்றவன் தான், ஆளையே காணேம்.

********** கட் 0018 ஷாட் மாத்துப்பா *************

'என்னடி இன்னும் தூங்கலையா?' என்று அம்மா கேட்டதும், பழைய நினைவில் இருந்து மீண்டாள் கீதா.

'இல்லமா, தூக்கம் வரல, நீங்க படுங்க, கொஞ்சம் பால்கனில வாக் போய்ட்டு வந்து படுக்கிறேன்' என்றாள் கீதா.

********** கட் 0019 ஷாட் மாத்துப்பா *************

'பீப் பீப்', ஐஸ்வர்யாவின் செல்லிடபேசியில் ஒரு SMS.

கல்லூரிக் காலங்களில் நம்ம ஐஸ்சு போல ஒரு அழகான் பொண்ணுக்கு SMS வருதுன்னா..... நமக்கு உள்ளத்தில் ஐஸ் தானே

இயக்குனர்: SMS என்னன்னு மக்களுக்குச் சொல்லிடலாமா? இல்ல வேணாமா?

உதவி இயக்குனர்கள்: சும்மா சொல்லு சார், சும்மா சும்மா சஸ்பென்ஸ் வச்சா, அப்புறம் நேயர்கள் / வாசகர்கள் கோச்சிக்கப் போறாக

'ஒற்றைப் பருக்கை உணவு கூட

ஒழுங்காய் ஜீரணிப்பதில்லை - உன்

ஓரப்பார்வையால்

ஓசையின்றி இதயத்தை விழுங்கிய பின்...

- விழியன்'

SMS ஐ படித்த ஐஸ்வர்யாவிற்கு குழப்பம்.

'யார் இந்த விழியன்?'

- இமை இன்னும் திறக்கும்.

இயக்குனர்: 'யார்ரா, இவனை உள்ள விட்டது? கொஞ்சம் அப்படி போயிடக் கூடாதே, உள்ள வந்து என்ன குழப்பம் பண்ணப் போறானோ?'

உதவி இயக்குனர்கள்: சார்... சார்.... எங்கல எல்லாம் இப்படி கட்டிப் போட்டுட்டு உள்ள போயிட்டான் சார்.

இயக்குனர் : விபாகை

உதவி (உபத்திரம்) இயக்குனர்கள்: லாவண்யா, விழியன், சிவா.....

Wednesday, July 05, 2006

'இமைப்பொழுது' - இமை - 9

'இமைப்பொழுது' - இமை - 9
' ம் ம்ம்ம்ம் , சுனிதா... ' வலியில் முனங்கினான் ரவிசுந்தர்.

********** கட் 0014 ஷாட் மாத்துப்பா *************

ரவிசுந்தர் முனங்குவதைக் கண்ட நர்ஸ், கீதாவின் அறைக்குச் சென்று ' இங்க யாருங்க சுனிதா, அடுத்த ரூம்ல இருக்குற பேஷண்ட் கூப்பிடுறாருங்க' என்றவளைப் பார்த்து அதிர்ந்தாள்.

'அய்யோ, பாருடி ரம்யா, அவருக்கு என் நினைப்பே போச்சு. இப்ப கூட சுனிதாவைத்தான் தேடுறாரு' என்றாள் கீதா அழுதபடி.

'ஏய் நீ அழுகாத, நான் போயி என்னனு பார்க்கிறேன்' என்றவள் , ' என்னங்க.. நீங்க கீதாவை கொஞ்சம் பார்த்துக்குங்க, நான் இதோ வந்திடுறேன்' என்றபடி சென்றாள் ரம்யா.

********** கட் 0015 ஷாட் மாத்துப்பா *************

'ரவி, எப்படி இருக்கீங்க' என்றாள் ரம்யா, ரவியின் தலைமுடியைக் கோதியபடி யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்ற பார்த்துக் கொண்டே...

'சுனிதா, நீயா இப்படி பண்ணுன' ரவிசுந்தர் புலம்பினான்.

'விடுங்க ரவி' அதுதான் நான் உங்க பக்கத்தில இருக்கன்ல' என்றாள் காதோரமாக...

ரம்யாவின் மூச்சின் அனலில் கண் விழித்த ரவி, ' நீங்க எப்ப வந்தீங்க.? கீதா எங்கே? ' என்றான்.

'ஆகா! மயக்கத்துல சுனிதா...... விழிச்சுண்டா கீதாவா?' என்றாள் ரம்யா நக்கலாக.

'சுனிதான்னா சொன்னேன்' என்றபடி மீண்டும் கண் அயர்ந்தான் ரவிசுந்தர்.

ரவியின் நிலையைக் கண்டு ரம்யாவின் மனம் கஷ்டப் பட்டாலும், இது நடைபெறாவிட்டால், தன்னால் ரவியை என்றுமே அடையமுடியாமல் போய் விடுமே என்பதால் சிறிது சந்தோஷப் பட்டாள்.

********** கட் 0016 ஷாட் மாத்துப்பா *************

ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறிய ரம்யா தனது செல்லிடபேசியில்
'ராம் ரொம்ப தேங்ஸ் ராம், எப்படியோ சுனிதா மேட்டர் கீதா காதுக்கு போயிடுச்சு. ரவிய சுனிதாவோட ஆளுங்க தான் அடிச்சாங்கன்னு கீதா நம்பிட்டா, ஆனா சுனிதா யாருன்னு உனக்கு தெரியுமா? இன்னைக்குத் தான் நான் அவள பாத்தேன். அசந்து போட்டேன். அவ என் காலேஜ்மேட். ரொம்ப நல்லவ... ஆனா அவ எப்படி ரவியோட? என்னால நம்பவே முடியல, ராம். உங்களுக்கு ரொம்ப தேங்ஸ்' என்ற ரம்யா மாருதி ஜென்னில் ஏறினாள், அவள் பேசியதை எல்லாம் ஒரு செல்லிடபேசி கேமராவில் பதிவாகிக் கொண்டிருப்பது தெரியாமல்.

- இமை இன்னும் திறக்கும்.

Tuesday, July 04, 2006

பெங்களூர் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு

பெங்களூர் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு

நாள் - ஜூலை 9,2006 (ஞாயிறு)

இடம் : லால் பாக் கார்டன்ஸ்

நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 2 வரை (உங்கள் விருப்பம் தான்)

பங்குகொள்ள விருப்பமுள்ளவர்கள் ஒரு நாள் முன்னராவது iyappan_k@yahoo.com அல்லது umanaths@gmail.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து தங்கள் வரவை தெரியப்படுத்தவும்.
சந்திப்பின் இடையே சின்ன சின்ன விவாதங்களும் இருக்கும்.
1.வலைப்பதிவுகளின் வரலாறு (புதிய வலைப்பதிவர்களுக்கு ஏதுவாக இருக்கும்)
2. வலைப்பதிவுகள் ஏன், அதன் எதிர்காலம்?
3. வலைப்பதிவுகள் வலிமை என்ன? அது இன்னும் என்ன விஷயங்களை வலுவாக செய்யலாம்?
4. வலைப்பதிவுகள் எப்படி சாதாரண மனிதனை சென்றடைய போகின்றது. அச்சில் வெளிவர என்ன வாய்ப்புலள் உள்ளது?

இதுவரை எழுத்துக்கள் மூலம் மட்டுமே சந்தித்த நாம்,நேரிலே சந்தித்து, உரையாடி, தமிழ் பேசி, விளையாடி மகிழ்வோம்.

நேரில் சந்திக்க காத்திருக்கிறோம்.

-விபாகை.

'இமைப்பொழுது' - இமை - 8

'இமைப்பொழுது' - இமை - 8

'உங்கள பார்க்க சுனிதான்னு ஒருத்தங்க வந்திருக்காங்க.. உள்ள விடவா?' என கேட்டாள் நர்ஸ்.

கலவரமானாள் கீதா.

'ஏய் அமைதியா இரு' என்ற ரம்யா தனது கணவரிடம் ' ஏங்க நீங்க போயி பார்க்கக் கூடாதா?' என்றாள் அவசரமாக...

கிளம்பிய குமாரை தடுத்து 'நீங்க இருங்க, நான் போய் பார்க்கிறேன்' என்றவாறு கிளம்பினாள் ரம்யா.

வேகமாக சென்ற ரம்யா, சுனிதாவைக் கண்டவுடன் சிறிது திகைத்து நின்றாள்.

சுனிதா ரம்யாவை பார்த்து புன்னகைத்த படி, ' என்னடி, ஆச்சரியாம இருக்க. நான் எப்படி இங்க உயிரோட அப்படீன்னு...' ஆரம்பித்து பேசிக் கொண்டே போனாள்.

இயக்குனர்: கேமராமேன் சுனிதாவின் கண்களில் க்ளோசப் ஷாட் வச்சுக்க. அப்புறம் சுனிதாவைச் சுத்தி சுத்திவாங்க. மியூசிக் டைரக்டர், இந்த இடத்துல மியூசிக் கொஞ்சம் ஹெவியா வேணும். ஓகே...

புன்னகைத்த சுனிதாவின் கண்களில் கொலை வெறி அதிகமானது.

'நீ யாருன்னு எல்லோருக்கும் சொல்லாம நான் போக மாட்டேன்.' ஆனா இப்ப நான் கீதாவை பாக்கணும்'னு சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் சுனிதா.

உள்ளே நுழைந்த சுனிதா நேராக கீதாவிடம் சென்று, 'கீதா, நல்ல இருக்கீங்களா? வாழ்க்கைல தைரியம் நிறைய இருக்கணும். உடம்ப பார்த்துக்கோங்க' என்றவளிடம், கீதா கத்த ஆரம்பித்து விட்டாள்.

' ஏய்! யார்டி நீ, என் வாழ்க்கையை கெடுக்கவே வந்தியா?' போயிடு... என் வாழ்க்கையில இருந்து போயிடு'

'போயிடவா, இப்ப தான் வாசலுக்கே வந்திருக்கேன், அதுக்குள்ள வெறட்ட பாக்குற... நத்திங் டூயிங் கீதா. நீ பார்க்க வேண்டியதும், புரிஞ்சிக்க வேண்டியதும் இன்னும் நிறைய இருக்கு கீதா.. இப்ப போறேன், ஆனால் மீண்டும் மீண்டும் வருவேன்.' என்று திமிரான நக்கலுடன் கூறி விருட்டென வெளியேறினாள்.

பிரமித்த படி பார்த்த கீதா, 'ரம்யா? ரம்யா? எங்கடி இருக்க' என்று கத்த

வெளியே இருந்த ரம்யா, மெதுவாக உள்ளே வந்தாள்.

'அமைதியா இரு கீதா'

'என்ன பேசிட்டுப் போறா பாத்தியா?'

'சரி விடு, பேசிட்டா... ஆயிடுமா.... விடுடி' என்றாள் மலுப்பலாக.

'என்னடி நீயா இப்படி பேசுற' ஆச்சரியமாக கேட்டாள் கீதா.

இது எதுவும் புரியாதது போல நின்றிருந்தான் குமார் மனதுக்குள் சிரித்துக் கொண்டு.

********** கட் 0013 ஷாட் மாத்துப்பா *************

' ம் ம்ம்ம்ம் , சுனிதா... ' வலியில் முனங்கினான் ரவிசுந்தர்.

- இமை இன்னும் திறக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...