'இமைப்பொழுது' - இமை - 9
' ம் ம்ம்ம்ம் , சுனிதா... ' வலியில் முனங்கினான் ரவிசுந்தர்.
********** கட் 0014 ஷாட் மாத்துப்பா *************
ரவிசுந்தர் முனங்குவதைக் கண்ட நர்ஸ், கீதாவின் அறைக்குச் சென்று ' இங்க யாருங்க சுனிதா, அடுத்த ரூம்ல இருக்குற பேஷண்ட் கூப்பிடுறாருங்க' என்றவளைப் பார்த்து அதிர்ந்தாள்.
'அய்யோ, பாருடி ரம்யா, அவருக்கு என் நினைப்பே போச்சு. இப்ப கூட சுனிதாவைத்தான் தேடுறாரு' என்றாள் கீதா அழுதபடி.
'ஏய் நீ அழுகாத, நான் போயி என்னனு பார்க்கிறேன்' என்றவள் , ' என்னங்க.. நீங்க கீதாவை கொஞ்சம் பார்த்துக்குங்க, நான் இதோ வந்திடுறேன்' என்றபடி சென்றாள் ரம்யா.
********** கட் 0015 ஷாட் மாத்துப்பா *************
'ரவி, எப்படி இருக்கீங்க' என்றாள் ரம்யா, ரவியின் தலைமுடியைக் கோதியபடி யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்ற பார்த்துக் கொண்டே...
'சுனிதா, நீயா இப்படி பண்ணுன' ரவிசுந்தர் புலம்பினான்.
'விடுங்க ரவி' அதுதான் நான் உங்க பக்கத்தில இருக்கன்ல' என்றாள் காதோரமாக...
ரம்யாவின் மூச்சின் அனலில் கண் விழித்த ரவி, ' நீங்க எப்ப வந்தீங்க.? கீதா எங்கே? ' என்றான்.
'ஆகா! மயக்கத்துல சுனிதா...... விழிச்சுண்டா கீதாவா?' என்றாள் ரம்யா நக்கலாக.
'சுனிதான்னா சொன்னேன்' என்றபடி மீண்டும் கண் அயர்ந்தான் ரவிசுந்தர்.
ரவியின் நிலையைக் கண்டு ரம்யாவின் மனம் கஷ்டப் பட்டாலும், இது நடைபெறாவிட்டால், தன்னால் ரவியை என்றுமே அடையமுடியாமல் போய் விடுமே என்பதால் சிறிது சந்தோஷப் பட்டாள்.
********** கட் 0016 ஷாட் மாத்துப்பா *************
ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறிய ரம்யா தனது செல்லிடபேசியில்
'ராம் ரொம்ப தேங்ஸ் ராம், எப்படியோ சுனிதா மேட்டர் கீதா காதுக்கு போயிடுச்சு. ரவிய சுனிதாவோட ஆளுங்க தான் அடிச்சாங்கன்னு கீதா நம்பிட்டா, ஆனா சுனிதா யாருன்னு உனக்கு தெரியுமா? இன்னைக்குத் தான் நான் அவள பாத்தேன். அசந்து போட்டேன். அவ என் காலேஜ்மேட். ரொம்ப நல்லவ... ஆனா அவ எப்படி ரவியோட? என்னால நம்பவே முடியல, ராம். உங்களுக்கு ரொம்ப தேங்ஸ்' என்ற ரம்யா மாருதி ஜென்னில் ஏறினாள், அவள் பேசியதை எல்லாம் ஒரு செல்லிடபேசி கேமராவில் பதிவாகிக் கொண்டிருப்பது தெரியாமல்.
- இமை இன்னும் திறக்கும்.
No comments:
Post a Comment