Wednesday, July 19, 2006

'இமைப்பொழுது' - இமை - 13


'இமைப்பொழுது' - இமை - 13


ஆம்புலன்ஸ் ஒலி எழுப்பிக் கொண்டே வந்து பாடியை அள்ளிக் கொண்டு சென்றது.
'மீண்டும் ஒரு தலைவலி என்றவாறே ஜீப்பில் ஏறிப் பறந்தார், இன்ஸ்பெக்டர்.
இவை அனைத்தையும் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம். விழியில் பயத்துடன் ஒளிந்து கொண்டிருந்தது பத்ரியின் தோள் மீது ஒரு கை பட, திடுக்கிட்டுத் திரும்பினான்.
' என்ன பத்ரி, போலீஸ் அது இதுன்னு ஒரே பரபரப்பாக இருக்கு' ஒண்ணும் தெரியாதவனாய் குமார் விசாரிக்க, கண்ணில் கோபத்துடன் குமாரை முறைத்தான் பத்ரி.
' என்னடா, வெவரம் என்னென்னா என்ன மொறக்கிற'
'எல்லாம் உன்னால தான், சரி அப்புறம் பேசலாம், மொதல்ல இங்கயிருந்து கிள்ம்புவோம்.'
'ஏய், நீ அவசரப் படுறதப் பார்த்தா, நீயே கொலை செஞ்சிருப்ப போல இருக்கு?' என்ற குமாரை மீண்டும் ஒரு முறை முறைத்து வண்டில் ஏறி 'உட்காருடா' என்றான் வெறுப்பாக.


********** ஷாட் 0025 *************


'கொடைக்கானல்'
அழகிய வெள்ளை நிற 'சுவராஜ் மஸ்டா' கோடை ஏரிக்கரையில் வந்து நின்றது,
கதவைத் திறந்து கொண்டு வண்ண வண்ண தேவதைகள் துள்ளிக் குதித்து இறங்கினர். கோடை குளிரில் நனைந்த வாலிப உள்ளங்கள் அவர்களைக் கண்டு வாழ்த்து இசைத்தனர். பழகிய தேவதைக் கூட்டம் கண்டு கொள்ளாது சென்றனர்.
இறுதியாக கீழே இறங்கிய ஐஸ்வர்யாவைப் பார்த்து அந்த ஏரி கூட உடல் சிலிர்த்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஐஸ்வர்யா காலை தரையில் வைத்தவுடன்..
'பீப் பீப்......பீப் பீப்......'
செல்லிட பேசியில் செய்திக்கான அறிகுறி. 'யாராஇருக்கும்?' கேள்வியோடு பார்க்க, அதில்


' உன் கால் பட்ட இடங்களில்
என் கரம் தொட்டுக் காக்க
வரம் கொடு.'

- விழியன்


மீண்டும் அவளிடத்தில் ஓர் கேள்வி, 'யார் இந்த விழியன்?' நின்று விழித்த ஐஸ்வர்யாவை அவள் தோழி ரூபா காதில் காற்றூதிக் கலைத்தாள்.
' என்னடி கொடைக்கானல கால் வச்சவுடன் அப்படியே திகைச்சுப் போயிட்ட? ம்.'
தனது செல்லிடபேசியில் செய்தியை அவளிடம் காண்பிக்க 'அப்படிப் போடு, அது தான் சங்கதியா? யாருடி இந்த விழியன்? எனக்குத் தெரியாம?' என்ற ரூபாவை முறைத்த ஐஸ்
'அவன் இங்க எங்கேயோ இருக்கணும், இல்லைனா எப்படி நான் கீழே கால் வச்சதும் மெசேஜ் அனுப்புவான் ' என்றவாறு சுற்றி சுற்றி பார்க்க, மீண்டும்
'பீப் பீப்......பீப் பீப்......'
செல்லிட பேசியில் செய்திக்கான அறிகுறி.


'விழிகளால் தேடாதே
விழியனை,
மொழிகள் பேசிட
வழிகள் பிறக்கும்'


- விழியன்


'ஆஹா.......நம்ம ஐஸ் அக்கா மாட்டிக்கிட்டாளா?' நண்பர்கள் கூட்டம் கிண்டலடிக்க,
அச்சம் கலந்த புன்னகை, லேசான கோபம், அவமானம் அனைத்தும் அவள் விழிகளில்.


- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர் : விபாகை

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...