Tuesday, July 04, 2006

'இமைப்பொழுது' - இமை - 8

'இமைப்பொழுது' - இமை - 8

'உங்கள பார்க்க சுனிதான்னு ஒருத்தங்க வந்திருக்காங்க.. உள்ள விடவா?' என கேட்டாள் நர்ஸ்.

கலவரமானாள் கீதா.

'ஏய் அமைதியா இரு' என்ற ரம்யா தனது கணவரிடம் ' ஏங்க நீங்க போயி பார்க்கக் கூடாதா?' என்றாள் அவசரமாக...

கிளம்பிய குமாரை தடுத்து 'நீங்க இருங்க, நான் போய் பார்க்கிறேன்' என்றவாறு கிளம்பினாள் ரம்யா.

வேகமாக சென்ற ரம்யா, சுனிதாவைக் கண்டவுடன் சிறிது திகைத்து நின்றாள்.

சுனிதா ரம்யாவை பார்த்து புன்னகைத்த படி, ' என்னடி, ஆச்சரியாம இருக்க. நான் எப்படி இங்க உயிரோட அப்படீன்னு...' ஆரம்பித்து பேசிக் கொண்டே போனாள்.

இயக்குனர்: கேமராமேன் சுனிதாவின் கண்களில் க்ளோசப் ஷாட் வச்சுக்க. அப்புறம் சுனிதாவைச் சுத்தி சுத்திவாங்க. மியூசிக் டைரக்டர், இந்த இடத்துல மியூசிக் கொஞ்சம் ஹெவியா வேணும். ஓகே...

புன்னகைத்த சுனிதாவின் கண்களில் கொலை வெறி அதிகமானது.

'நீ யாருன்னு எல்லோருக்கும் சொல்லாம நான் போக மாட்டேன்.' ஆனா இப்ப நான் கீதாவை பாக்கணும்'னு சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் சுனிதா.

உள்ளே நுழைந்த சுனிதா நேராக கீதாவிடம் சென்று, 'கீதா, நல்ல இருக்கீங்களா? வாழ்க்கைல தைரியம் நிறைய இருக்கணும். உடம்ப பார்த்துக்கோங்க' என்றவளிடம், கீதா கத்த ஆரம்பித்து விட்டாள்.

' ஏய்! யார்டி நீ, என் வாழ்க்கையை கெடுக்கவே வந்தியா?' போயிடு... என் வாழ்க்கையில இருந்து போயிடு'

'போயிடவா, இப்ப தான் வாசலுக்கே வந்திருக்கேன், அதுக்குள்ள வெறட்ட பாக்குற... நத்திங் டூயிங் கீதா. நீ பார்க்க வேண்டியதும், புரிஞ்சிக்க வேண்டியதும் இன்னும் நிறைய இருக்கு கீதா.. இப்ப போறேன், ஆனால் மீண்டும் மீண்டும் வருவேன்.' என்று திமிரான நக்கலுடன் கூறி விருட்டென வெளியேறினாள்.

பிரமித்த படி பார்த்த கீதா, 'ரம்யா? ரம்யா? எங்கடி இருக்க' என்று கத்த

வெளியே இருந்த ரம்யா, மெதுவாக உள்ளே வந்தாள்.

'அமைதியா இரு கீதா'

'என்ன பேசிட்டுப் போறா பாத்தியா?'

'சரி விடு, பேசிட்டா... ஆயிடுமா.... விடுடி' என்றாள் மலுப்பலாக.

'என்னடி நீயா இப்படி பேசுற' ஆச்சரியமாக கேட்டாள் கீதா.

இது எதுவும் புரியாதது போல நின்றிருந்தான் குமார் மனதுக்குள் சிரித்துக் கொண்டு.

********** கட் 0013 ஷாட் மாத்துப்பா *************

' ம் ம்ம்ம்ம் , சுனிதா... ' வலியில் முனங்கினான் ரவிசுந்தர்.

- இமை இன்னும் திறக்கும்.

2 comments:

aaradhana said...

சார் உங்கள் கதை ஓட்டம் நன்றாக உள்ளது. இன்னும் எழுதுங்கள்.

விபாகை said...

வாழ்த்துக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...