Tuesday, July 18, 2006

'இமைப்பொழுது' - இமை - 12

'இமைப்பொழுது' - இமை - 12
********** கட் 0021 ஷாட் மாத்துப்பா *************

'தட தட தட தட தட தட தட தட தட தட' தலைதெறிக்க ஓடி வந்த முத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ' டேய், டேய், அங்க ஒருத்தனை அடிச்சேக் கொன்னுட்டான் நம்ம குமார்டா.'
' என்னடா சொல்ற'
' ஏய் நிஜமாவா?'
' மெய்யாலுமாடா?'
நண்பர்கள் ஆளுக்கொருவராய் கேட்க, பேச முடியாத முத்து, ' ஆமா, என்பது போல் தலையசைத்து தலை குனிந்து மூச்சு வாங்கினான்..
எங்கடா? என்றவாறு முத்து வந்த திசையை நோக்கி ஓடினான் பத்ரி.
ஆள் ஆரவாரமற்ற அந்த முச்சந்தியில் ஒருவன் தரையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்க, குமார் தனது காரில் ஏறிச் சென்றி விட்டான்.
ஓடிச் சென்ற பத்ரி கீழே விழுந்தனைத் திரும்பிப் பார்த்து அதிர்ந்தான்..
அது.........

********** கட் 0022 ஷாட் மாத்துப்பா *************

'டாட் எங்க காலேஜ்ல நாங்க டூர் போறாம், எனக்கு ஒரு 10,000 ருபீஸ் வேணும் டாட்.'
'வாவ், 10000 ருபீஸ் என்னடா 20000 ருபீஸ் தர்றேன், ஆனா நீ மட்டும் டூர் போகமா என் கூட இருந்திருடா'
'டாட், போங்க டாட், என்ன எங்கேயுமே விட மாட்டீங்கிறீங்க, இல்ல டாட் நான் கண்டிப்பா போவேன்'.
'ஓகே, எத்தனை நாள்?'
'3 டேஸ் டாட்'
'அய்யோ, 3 டேஸ்ஸா..... உன்னை பாக்காம ஒரு நாள் இருக்குறதே கஷ்டம், அதுவும் 3 டேஸ்னா, எப்படிடா?...'
'டாட் ப்ளீஸ் டாட், ப்ளீஸ்......'
'ஒகே...ஓகே'
'ஸ்வீட் டாட்' என்றவாறே ராகவனுக்கு முத்தம் கொடுத்து விட்டு சிட்டாய் பறந்தாள் ஐஸ்வர்யா.

********** கட் 0023 ஷாட் மாத்துப்பா *************

'ஸார், நம்ம மூணாவது முக்கிய வீதியில் ஒரு பிணம் கிடக்குது சார்' கான்ஸ்டபிள் 302, இன்ஸ்பெக்டரிடம் கூற, போன மாத ரேப் கேஸ் பைலை பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சலிப்புடன் நிமிர்ந்து,
யாரது? வயது என்ன இருக்கும்? சரி சரி வாங்க போயி பார்க்கலாம் என்றவாறு கிளம்பினார்.

********** கட் 0024 ஷாட் மாத்துப்பா *************

'போரன்சிக் லேப்க்கு சொல்லியாச்சாப்பா?, பாடிய போஸ்ட்மார்ட்டம் அனுப்பு, நேர்ல பார்த்த சாட்சி யாராவது இருக்காங்களா? என்றவாறே சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார்.
'இல்ல சார், யாரும் பாக்கலையாம்' என்றார் கான்ஸ்டபிள் 302.
ஆம்புலன்ஸ் ஒலியை எழுப்பிக் கொண்டே வந்து பாடியை அள்ளிக் கொண்டு சென்றது.
'மீண்டும் ஒரு தலைவலி என்றவாறே ஜீப்பில் ஏறிப் பறந்தார், இன்ஸ்பெக்டர்.
இவை அனைத்தையும் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம்.

- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர் : விபாகை

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...