'இமைப்பொழுது' - இமை - 10
********** கட் 0017 ஷாட் மாத்துப்பா *************
'காபி சாப்பிடுங்க' என்றாள் கீதா, ரவிசுந்தரிடம்.
'இல்ல வேணாம்'
'சரி நான் தான் எதையும் மனசில வச்சுக்கலன்னு சொல்லீட்டேன்ல, அப்புறம் ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க...... தலை வலிக்குதா?' என்றாள் ரவிசுந்தரின் நெற்றியில் கை வைத்துக் கொண்டு.
திடீர் என குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான் ரவி,
' என்னைய மன்னிச்சிடு.. கீதா, மன்னிச்சிடு' என்றான் அவளைத் தழுவிக் கொண்டு.
மனம் கரைய அவள் கண்ணிலும் நீர்.
'க்கூக்கு... க்கூக்கு....' - அழைப்பு மணி ஒலித்தது,
சட்டென பிரிந்து, கண்ணீரை தனது துப்பட்டாவில் துடைத்தபடியே கதவைத் திறந்தாள்.
வாசலில் குமார்.
'சாரி... டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன், ரம்யா அவசரமா ஊருக்குப் போயிட்டா, யாரோ அவளோட சொந்தக்காரர் இறந்துட்டாராம். அதான் வீட்டுச் சாவியை கொடுத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். சாரி' என்றான் குமார்.
'அய்யோ, அதெல்லாம் ஒண்ணுமில்ல.... கொடுத்திட்டுப் போங்க', என்றாள் கீதா மலுப்பலாக.
' என்ன ரவிசுந்தர் சார்! ஆபிஸ்க்குப் போகலையா?, நான் வாரேன்', என்று எந்த பதிலுக்கும் காத்திராமல் கிளம்பினான்.
கதவைச் சாத்திட்டு திரும்பிய கீதாவின் கன்னத்தில் 'நச்சென்று' முத்தமிட்டு, சிரித்தபடி 'நானும் ஆபிஸ் கிளம்புறேன்' என்று சென்றவன் தான், ஆளையே காணேம்.
********** கட் 0018 ஷாட் மாத்துப்பா *************
'என்னடி இன்னும் தூங்கலையா?' என்று அம்மா கேட்டதும், பழைய நினைவில் இருந்து மீண்டாள் கீதா.
'இல்லமா, தூக்கம் வரல, நீங்க படுங்க, கொஞ்சம் பால்கனில வாக் போய்ட்டு வந்து படுக்கிறேன்' என்றாள் கீதா.
********** கட் 0019 ஷாட் மாத்துப்பா *************
'பீப் பீப்', ஐஸ்வர்யாவின் செல்லிடபேசியில் ஒரு SMS.
கல்லூரிக் காலங்களில் நம்ம ஐஸ்சு போல ஒரு அழகான் பொண்ணுக்கு SMS வருதுன்னா..... நமக்கு உள்ளத்தில் ஐஸ் தானே
இயக்குனர்: SMS என்னன்னு மக்களுக்குச் சொல்லிடலாமா? இல்ல வேணாமா?
உதவி இயக்குனர்கள்: சும்மா சொல்லு சார், சும்மா சும்மா சஸ்பென்ஸ் வச்சா, அப்புறம் நேயர்கள் / வாசகர்கள் கோச்சிக்கப் போறாக
'ஒற்றைப் பருக்கை உணவு கூட
ஒழுங்காய் ஜீரணிப்பதில்லை - உன்
ஓரப்பார்வையால்
ஓசையின்றி இதயத்தை விழுங்கிய பின்...
- விழியன்'
SMS ஐ படித்த ஐஸ்வர்யாவிற்கு குழப்பம்.
'யார் இந்த விழியன்?'
- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர்: 'யார்ரா, இவனை உள்ள விட்டது? கொஞ்சம் அப்படி போயிடக் கூடாதே, உள்ள வந்து என்ன குழப்பம் பண்ணப் போறானோ?'
உதவி இயக்குனர்கள்: சார்... சார்.... எங்கல எல்லாம் இப்படி கட்டிப் போட்டுட்டு உள்ள போயிட்டான் சார்.
இயக்குனர் : விபாகை
உதவி (உபத்திரம்) இயக்குனர்கள்: லாவண்யா, விழியன், சிவா.....
1 comment:
கலக்கறீங்க... ஆனால் நிறைய கதாபாத்திரங்கள் அதனால் சற்று குழப்பம். இருந்தாலும் ராடன் டிவி-ல இருந்து வர சீரியல்-ஸ்க்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இருக்கு... தொடர்ந்து எழுதுங்கள்..
Post a Comment