'இமைப்பொழுது' - இமை - 14
********** ஷாட் 0027 ************
'வாங்க சார், நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம் சார், உள்ள வாங்க சார், உங்க கையால இந்த குத்து விளக்க ஏத்தி வைங்க சார்'
புன்னகையுடன் உள்ளே நுழைந்தார் ராகவன். ரீமாசென் போல தோற்றம் கொண்ட பெண்ணொருத்தி அவரிம் மெழுகுவர்த்தியை நீட்ட, அவளின் கரத்தை தழுவிய படியே வாங்கி தீபம் ஏற்றினார்.
விளக்கேற்றி திரும்பிய ராகவனை வரவேற்றது ஓர் இரும்புக்கரம்......
அது திலீப்குமார்.
' என்ன மிஸ்டர் ராகவன், நலமா?' என்றபடி கைகுலுக்கிய போது சிறு நடுக்க்த்தை உணர்ந்தார்.
'ஓ நல்லா இருக்கேன் இன்ஸ்பெக்டர், நீங்க எப்படி இருக்கீங்க?' என்றார் சமாளித்த படி.
'உங்களப் போல சில நல்லவர்கள் எல்லாம் எனக்கு சப்போட்ட இருக்குறப்போ எனக்கென்ன ராகவன்' என்ற திலீப் குமாரை பார்த்து சிரித்தார் ராகவன்.
' அப்புறம் ராகவன், உங்கள நான் ரொம்ப நாளா பார்த்து ஒரு உதவி கேட்கணம்னு நினைத்துக்கிட்டே இருந்தேன்'
'சொல்லுங்க இன்ஸ்பெக்டர், உங்களுக்கு பண்ணாம வேற யாருக்குப் பண்ணப் போறேன், சொல்லுங்க.'
' எனக்கு தெரிஞ்ச பொண்ணு, பேரு ப்ரியா, செகரட்டரிஷிப் கோர்ஸ் பண்ணியிருக்கா, உங்க ஆபீஸ்ல ஒரு வேல போட்டுக் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்'
' அதுக்கென்ன நாளைக்கே வரச்சொல்லுங்க, என்னோட பெர்சனல் செகரட்டரியா வச்சிக்கிறேன்'
'ஓ, ரொம்ப தேங்க்ஸ், இவ்வளவு சீக்கிரமா வேல முடியும் அப்படின்னு நான் நினைக்கவே இல்ல'.
'இதுக்கெல்லாம் என்ன சார் தேங்க்ஸ், நான் உங்களுக்கு பண்ண மாதிரி நீங்க எனக்கு எப்பவாவது உதவ மாட்டீங்களா என்ன' என பிஸினஸ்மேன் பாலிசியில் பேசினார்.
'சரி நாளை காலைல உங்க ஆபீஸ்க்கு அனுப்பி வைக்கிறேன், ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, அப்புறம் சந்திக்கிறேனே' என்ற படி கிளம்பினார் திலீப்குமார்.
'சார், எங்களோட சின்ன அன்பளிப்பு நம்ம ஐஸ்வர்யா பாப்பாவுக்காக' என ஒரு மூன்று பட்டுச்சேலைகளை கொடுத்த கடைக்காரரிடம், இரண்டு 100 ரூபாய் கட்டை திணித்து விட்டு விடைபெற்றார், ராகவன்.
********** ஷாட் 0028 ************
செல்லிட பேசி சினுங்கிட, கையிலெடுத்த ப்ரியா, 'ஹாய் டார்லிங், என்ன காலைல இருந்து போனே பண்ணல' என்றார்.
'அதான் இப்ப பண்ணீட்டன்ல' என்ற திலீப்குமார் 'ப்ரியா, நீ நாளையிலிருந்து ராகவனோட பெர்சனல் செகரட்டரியா வேலைக்குப் போற' என்றார்.
'அய்யோ, என்னடா இது வம்புல மாட்டிவுடுற, அவன் ஒரு ஜொல்லுப்பார்ட்டின்னு நான் கேள்விப் பட்டிருக்கேன், அவன் ஆபீஸ்ல அதுவும் பெர்சனல் செகரட்டரியாவா? நோ சான்ஸ்'
'ப்ரியா, அதனால தான் நான் உன்ன அனுப்புறேன்'
'நீ யாரையும் ஈசியா சமாளிச்சிடுவ..... அப்புறம் அவங்க உன் கைப்பொம்மையா மாறிடுவாங்க.... ஆனா நீ மட்டும் அப்படியே மிஸ்,ப்ரியாவா இருப்ப.... ப்ளீஸ், ஒத்துக்க டியர்'
'சரி சரி நாளைக்கு காலைல போறேன், ஆனா அவன் அளவுக்கு மீறினா அப்புறம் நீ தான் டியர் அவனோட கொலைக் கேசையும் டீல் பண்ண வேண்டி வரும், சரியா' என்றாள் சிரித்த படி.....
' ஓகே, பை'
********** ஷாட் 0029 ************
காலையில் அலுவலகம் கிளம்பும் போது ராகவனின் வேலைக்காரனிடம், 'ஏய், அந்த டெண்டர் பைல் எங்க' என்றவரிடம், 'இந்த..... இங்க தான் இருக்கு, பேசாம ஒரு செக்டரி வெச்சா என்னவா' என்றான் வேலைக்காரன். முப்பது வருசமா வேல பார்க்கிறான், அவரிடம் அவனுக்கு கொஞ்சம் உரிமை அதிகம் தான்.
'அது செக்டரி இல்லடா, செகரட்டரி' என்றார்.
'அது என்னவோ, புரிஞ்சா சரி' என்றபடியே சென்றான்.
அப்போ தான் அவருக்கு திலீப்குமார் கூறிய ப்ரியாவின் நினைப்பு வந்தது.
காரில் செல்லும் போது அவருக்கு ப்ரியாவின் நினைப்பு தான்.
சினேகா முதல் நமிதா வரை அனைவரும் அவர் கண்முன் வந்து சென்றார்கள்.
********** ஷாட் 0030 ************
அலுவலகத்தின் வாசலில் இறங்கி அவரின் அறைக்குச் சென்ற ராகவனுக்கு உள்ளே ஒரு அதிர்ச்சிக் காத்திருப்பது தெரியாது.....
அது என்ன?
- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர் : விபாகை
1 comment:
July-kku piragau kathai nagarave illai... neram kidaikkavillaiya illai iyakkunar adutha padaippugalil aaznthu vittaraa?
Post a Comment