Friday, February 11, 2011
Wednesday, February 09, 2011
ஆரிய குளிப்பு - தினம் ஒரு கவிதை

பனித்துளி கன்னத்தில்
சூரிய முத்தம்
வழியும் இதழில்
வாசனைச் சுத்தம்
பரவும் உடலில்
உணர்ச்சி பூகம்பம்
வெடிக்கும் பூவில்
உயிரின் சத்தம்.
ஆறிடும் தவிப்பு,
ஆரிய குளிப்பு.
Tuesday, February 08, 2011
விடிந்தன கனவுகள் - தினம் ஒரு கவிதை
Monday, December 20, 2010
“வெயில் தின்ற மழை” நூல் வெளியீட்டு விழா

Wednesday, October 27, 2010
நீ
வெண்ணிற ஆடை
அளித்த சமூகம்.
மறைந்த போது
பூ சூட்டி
பொட்டிட்டது.
----------------------------------
உன் இதயத்துடிப்பின்
இசை கேட்டு
துயில வேண்டும்.
விழியில் மறுத்த
தூக்கம்
உன் மடியில் வந்தது.
----------------------------------
சற்றே பறித்த
அழகிய மலருடன்
உன்னை சந்தித்தேன்
மலரொன்றும்
அத்தனை அழகில்ல தான்.
----------------------------------
நீ
கடந்து சென்று
திரும்பி பார்க்கிறாய்.
புயல் கடந்து
தென்றல் வீசியது.
– விபாகை
Friday, November 27, 2009
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

(ஆன்மீகத்தில் தன்னை முழுவதுமாக அர்பணித்து, அனுபவித்து உணர்ந்திட்ட வரிகள். பாடிப்பாருங்கள். உள்ளம் கரைந்து உணர்வீர்கள்.)
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
யாமொரு பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
பிண்டம் என்னும் எலும்பொடு
சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
பிண்டம் என்னும் எலும்பொடு
சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
அம்மையும் அப்பனும் தந்ததா?…..
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?.....
அம்மையும் அப்பனும் தந்ததா?
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
இம்மையை நான் அறியாததால்…..
இம்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட ,
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்…
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒருமுறையா…. இருமுறையா…
பலமுறை பலபிறப்பெடுக்க வைத்தாய்.
புது வினையா…. பழ வினையா…
கனம் கனம் தினம் எனை
துடிக்க வைத்தாய்.
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும்
துரத்துதே…..
உன் அருள் அருள் அருள் என்று
அழைகின்ற மனம் இன்று
பிதற்றுதே….
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து
உனதருள் பெற
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
‘இசைஞானி’ இளையராஜா எழுதி இசையமைத்து பாடிய பாடல்
– ‘ரமணமாலை’ எனும் இசைத் தொகுப்பிலிருந்து.
இன்றைய சிந்தனை
Sunday, March 15, 2009
'மனிதம்' மின்னிதழ்
வணக்கம்.
உலக மகளிர் தினத்தில் இருந்து மனிதம் எனும் மின்னிதழ் வெளிவருகிறது.
தாங்கள் 'மனிதம்' மின்னிதழில் உறுப்பினராக manidham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தனிமடல் இடவும்.
மனிதம் இதழ் பிரதி மாதம் 10 திகதிகளில் அனுப்பிவைக்கப்படும்.கிடைக்காத போது தயவு கூர்ந்து manidham@gmail.com என்ற மின்னஞ்சலுக்குதனிமடல் இடவும்.
தங்களின் நண்பர்களின்மின்னஞ்சல் முகவரியை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். மாத மாதம் மனிதம் மின்னிதழ்அவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர் சேர்க்கைக்கு manidham@gmail.com மின்னஞ்சலுக்கு மடலிடவும்.
புதிய படைப்பாளிகளையும் மனிதம் வரவேற்கிறது. தங்களின் படைப்புகளைeditor@manidham.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
மனிதம் படித்து எங்களுக்கு பின்னூட்டம் எழுதவும். குறை நிறைகளையும் எழுதிஅனுப்புங்கள்.
மனிதமுடன்
விபாகை.
ஆசிரியர் மனிதம்.
Wednesday, January 23, 2008
Sunday, January 13, 2008
மெட்டுக்கேத்த பாடல்
விழியோரம் மொழிபேசும் அழகோவியம் கண்டு
குயில் பாட மறந்தாளோ பெண்ணே...
நதியோரம் நடைபோடும் ஒய்யாரம் கண்டு
நதி ஓட மறந்தாளோ கண்ணே...
முகம் மறந்தது போல்
நிழல் தொலைந்தது போல்
முகம் மறந்தது போல் - என்
நிழல் தொலைந்தது போல்
என்னுள் ஒரு புது மாற்றம் கண்டேன் - அது
உன்னால் என முடிவாகக் கொண்டேன். - விழியோரம்.....
உன்னோடு தூங்கும் இருளாக வேண்டும்
விழிக்கின்ற போதும் ஒளியாக வேண்டும்
குளிக்கின்ற போதும் நீராக வேண்டும்
துடைக்கின்ற போதும் துகிலாக வேண்டும்
நெளிவின்றி நதியா?ஸ்ருதியின்றி இசையா?
நீயின்றி நான் வாழ்வேனா?
நீ சொல்லு பெண்ணே
நான் உந்தன் கண்ணே. - விழியோரம்.....
காற்றின் ஒலி கேட்டு செவியாக வேண்டும்
கீற்றின் ஒளி காண விழியாக வேண்டும்
என் சோகம் தீர்க்கும் விரலாக வேண்டும்
காலத்தின் நிறம் காண நீ என்றும் வேண்டும்
பூவின்றி தேனா?'ழ' இன்றி தமிழா?
நீயின்றி நான் வாழ்வேனா?
நீ சொல்லு பெண்ணே
நான் உந்தன் கண்ணே. - விழியோரம்.....
- விபாகை