Monday, August 08, 2011

சிறகு தொலைத்த ஒற்றை வால் குருவி

அடர்ந்த இருண்ட காட்டின் நடுவே
பெருத்த இரைச்சலுடன் சென்று கொண்டிருந்தது
அந்த ஒற்றை வால் குருவி

காற்றைக் கிழித்து முன் செல்ல
சிறகுகள் சில கொடுத்து கடந்தன.

அங்கெங்கும் அலைந்தபடி பறந்தோடிய
அச்சிறகு மண் தொட்ட
அந்த நிமிடம்...
முட்களோடு விளையாடிக் கொண்டிருந்த
சிறு தேவதை பூப்பெய்தினாள்.

ஈக்களும், புழுக்களும், பூச்சிகளும்
சுற்றித்திரிந்த நாட்கள் மரித்து
வண்டுகள் பூத்திடும் நந்தவனமாயிற்று

ஒற்றை வால் குருவி
விட்டுச் சென்ற சிறகினைக் கொண்டு
தன்னை அலங்கரித்துக் கொண்டாள்
அந்த சிறு தேவதை

சிறகு தொட்டு பெண்ணான கதை கேட்காது
உதிர்ந்த சிறகின் வாசனை இல்லா
தூரத்தில் பறந்து கொண்டிருந்தது
சிறகு தொலைத்த
ஒற்றை வால் குருவி

- விபாகை ர.ராஜலிங்கம்

2 comments:

மதிகண்ணன் said...

நுட்பமான வரிகளைக் கொண்ட கவிதையாக விரிந்திருக்கிறது.

ஒற்றை வால் குருவி
விட்டுச் சென்ற சிறகினைக் கொண்டு
தன்னை அலங்கரித்துக் கொண்டாள்
அந்த சிறு தேவதை

சிறகு தொட்டு பெண்ணான கதை கேட்காது
உதிர்ந்த சிறகின் வாசனை இல்லா
தூரத்தில் பறந்து கொண்டிருந்தது
சிறகு தொலைத்த
ஒற்றை வால் குருவி

குருவிக்கும் சிறு தேவதைக்குமான உறவு காணா தேசங்களில் இருந்தபோதும் என்றென்றும் நிலைத்த ஒன்று என்பதை வாசிப்பிற்கு உணர்த்திய நுண் கவிதை. வாழ்த்துக்கள்.

விபாகை said...

நன்றி மதிகண்ணன்.

Related Posts Plugin for WordPress, Blogger...