விரிந்து கிடந்திட்ட
மயான இருட்டில்
சிவந்து கொண்டிருந்த
சவக்குழியில்
கனந்து இறங்கும்
விறகுகள்;
உடல் வெந்துண்டு
அனல் பரவிட
பிணத்தின் கருவறையில்
மீண்டும் ஒரு
பிணத்தின் ஜனனம்.
(ஆன்மீகத்தில் தன்னை முழுவதுமாக அர்பணித்து, அனுபவித்து உணர்ந்திட்ட வரிகள். பாடிப்பாருங்கள். உள்ளம் கரைந்து உணர்வீர்கள்.)
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
யாமொரு பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
பிண்டம் என்னும் எலும்பொடு
சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
பிண்டம் என்னும் எலும்பொடு
சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
அம்மையும் அப்பனும் தந்ததா?…..
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?.....
அம்மையும் அப்பனும் தந்ததா?
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
இம்மையை நான் அறியாததால்…..
இம்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட ,
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்…
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒருமுறையா…. இருமுறையா…
பலமுறை பலபிறப்பெடுக்க வைத்தாய்.
புது வினையா…. பழ வினையா…
கனம் கனம் தினம் எனை
துடிக்க வைத்தாய்.
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும்
துரத்துதே…..
உன் அருள் அருள் அருள் என்று
அழைகின்ற மனம் இன்று
பிதற்றுதே….
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து
உனதருள் பெற
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
‘இசைஞானி’ இளையராஜா எழுதி இசையமைத்து பாடிய பாடல்
– ‘ரமணமாலை’ எனும் இசைத் தொகுப்பிலிருந்து.
வணக்கம்.
உலக மகளிர் தினத்தில் இருந்து மனிதம் எனும் மின்னிதழ் வெளிவருகிறது.
தாங்கள் 'மனிதம்' மின்னிதழில் உறுப்பினராக manidham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தனிமடல் இடவும்.
மனிதம் இதழ் பிரதி மாதம் 10 திகதிகளில் அனுப்பிவைக்கப்படும்.கிடைக்காத போது தயவு கூர்ந்து manidham@gmail.com என்ற மின்னஞ்சலுக்குதனிமடல் இடவும்.
தங்களின் நண்பர்களின்மின்னஞ்சல் முகவரியை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். மாத மாதம் மனிதம் மின்னிதழ்அவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர் சேர்க்கைக்கு manidham@gmail.com மின்னஞ்சலுக்கு மடலிடவும்.
புதிய படைப்பாளிகளையும் மனிதம் வரவேற்கிறது. தங்களின் படைப்புகளைeditor@manidham.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
மனிதம் படித்து எங்களுக்கு பின்னூட்டம் எழுதவும். குறை நிறைகளையும் எழுதிஅனுப்புங்கள்.
மனிதமுடன்
விபாகை.
ஆசிரியர் மனிதம்.