ஊடகமனிதன் வழங்கும்....
இமைப்பொழுது - இமை - 3
'ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... ' - ராகவனின் செல்லிடபேசி துடித்தது. செல்லிடபேசியை கையில் எடுத்து பார்த்தார். அதில் 'சுந்தர்' - என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது. குழப்பத்தில் புருவம் சுழித்து, செல்லிடபேசியை கையிலெடுத்தார்.
இயக்குனர்: கேமராமேன்! கேமராவை கையில வைத்துக்கிட்டு சும்மா ஒரு பத்து நிமிசம் சுத்தி சுத்தி வாப்பா.
கேமராமேன்: அய்ய்ய்ய்ய்யா..... சான்ஸ்யா??
1: ( ஆரம்பிச்சுட்டாங்கடா? )
2: (கொஞ்சம் வித்தியாசமாத்தான் யோசிங்கலேம்ப்பா??? :( )
விரல்கள் 'Call' பொத்தானை அழுத்த 'ஹலோ! ' - இது சுந்தரின் குரல் தான்.
எதற்காக ரவி தனக்கு தொலைபேசுகிறான் என்பது புரியாமல் ராகவன் 'ஹலோ! ரவி' - என்றார்.
'ராகவ், நான் லண்டன்ல இருந்து பேசுறேன். நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்', என்றான்.
'லண்டன் !!!?? என்ன சொல்ற சுந்தர், உன்னைய எல்லாரும் இங்க காணோம்னு தேடிக்கிட்டிருக்காங்க... நீ என்னடான்னா... லண்டனிலிருந்து பேசிறேன்னு சொல்லுற....' கொஞ்சம் அதட்டலான குரலிலும், ஆனால் கனிவாகவும் கேட்டார்.
'ராகவ், நான் அத அப்புறமா சொல்லுறேன். எனக்கு இப்போ அவசரமா, ஒரு 10 லட்சம் வேண்டியிருக்கு. அதுவும் நாளைக்கே. உடனே, வெஸ்டர்ன் யூனியன்-ல அனுப்புங்க. அக்கவுண்டிங் டீடைல்ஸ உங்களுக்கு உடனே இமெயில்-ல அனுப்புறேன்'.
10 லட்சமா? என அதிர்ந்த ராகவன் பின்பு, சரி அனுப்புறேன் என்றார்.
'அப்புறம் ராகவ், நான் பேசினேன்னோ, லண்டன்ல இருக்கேன்னோ, யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம், குறிப்பா கீதாவுக்கு சொல்ல வேண்டாம். ப்ளீஸ்!' என்றான் சுந்தர்.
'சரி' என்றாலும் ராகவனின் குரலில் அத்தனை திருப்தியில்லை.
********** கட் 0005 ஷாட் மாத்துப்பா *************
'காபி டியர்' - என்றபடி எழுப்பிய மனைவியை கட்டிப்பிடித்து 'அதுக்குள்ளேயா?' என்றார் துணை போலீஸ் கமிஷனர் திலீப்குமார்.
' சீப்போங்க' சிணுங்கிய படி விழகிய கவிதா 'முதல்ல காபி குடிங்க' என்றாள்.
காபியை குடித்துக் கொண்டே, தன் செல்லிடபேசியை எடுத்தார் திலீப்குமார்.
'2 Messages Received' செல்லிடபேசியில் பதிவாகியிருந்தது.
' தனக்கும் சிலர் காலைவாழ்த்து செய்திகள் அனுப்புகிறார்களா என்ன ? ' - செய்திகளை படிக்க ஆரம்பித்தார்.
Message 1:
'You are so lucky to have me as a wife. - Good Morning ' - கவிதாவிடம் இருந்து தான் இந்த செய்தி. புன்னைகையோடு அடுத்த செய்திக்கு தாவினார்.
Message 2:
'Check for Industrialist Raghavan's Account today - Misuse of 10 lakhs to London - yours lovingly 'PRIYA' '.
அதிர்ந்தார் திலீப்குமார்.
---- இமை இன்னும் திறக்கும்
1 : (மெகா தொடரா? இல்ல சஸ்பென்ஸ் தொடராப்பா? )
2 : (சரி சரி, ஏதோ ஒண்ணு, எப்படித்தான் கத போகுதுன்னுப் பாப்போம்.)
இயக்குனர் : விபாகை
1 comment:
//விரல்கள் 'Call' பொத்தானை அழுத்த 'ஹலோ! ' - இது சுந்தரின் குரல் தான்.
எதற்காக ரவி தனக்கு தொலைபேசுகிறான் என்பது புரியாமல் ராகவன் 'ஹலோ! ரவி' - என்றார்.
'ராகவ், நான் லண்டன்ல இருந்து பேசுறேன். நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்', என்றான்.
'லண்டன் !!!?? என்ன சொல்ற சுந்தர்,....//
யாருங்க ரவி? சுந்தரும் ராகவனும்தானே பேசறாங்க? ஒரே குழப்பமா இருக்கே. மெகா சீரியல் பாக்காதேன்னு அப்பா அம்மா சொன்னாங்க. கேட்காம வந்து பார்த்த எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment