Saturday, March 11, 2006
ஏனோ சொல்ல நினைக்கிறேன் - 1
திருச்சி செல்ல வேண்டி பேரூந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்திட சற்று விலகி நின்று கொண்டிருந்தேன். திடீரென பேரூந்திலிருந்து சத்தம்..... நீ யாருடா! அதை கேட்க! நான் சும்மா வருவேன். மூட்டையை தூக்கிட்டு வருவேன். வேணும்னா நீ பார்த்து போ!' என்று ஒருவர் கூறிட... அதற்கு மற்றவர் 'நீ மூட்டையை தூக்கிட்டு வா. இல்ல வீட்டையே தூக்கிட்டு வா...எனக்கு கவலை இல்ல! ஆனா யாரு மேலயும் இடிக்காம கொண்டு போ!' இது ம்ற்றவர். அதாவது முதலாமவர் கையில் மிக பெரிய பையோடு ஏறி இருக்கிறார். அது ம்ற்றவர் மேலே இடித்து விட..... அதற்கு மற்றவர் ஏதோ கூறிட அதன் விளைவு தான் மேலே உள்ள உரையாடல்.
உரையாடல் வ்ழுத்து முதலாமவர் பேரூந்திலிருந்து இறக்கி விடப்பட்டார். இறங்கியவர் என் அருகே வந்து நிற்க அவருடன் வந்த நண்பரும் கூடவே வந்து சேர்ந்தார். நண்பர் அவரிடம் 'ஏண்டா! நீ யாருடனும் கோபப்படவே மாட்டியே! இன்னைக்குஎன்ன ஆச்சு உனக்கு? என்று கேட்டார். அவரும் நடந்த தவறுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டு 'இல்லடா! எனக்கே புரியல! நான் ஏன் இப்படி ந்டந்துக்கிட்டேன்னு?'என்றார். சிறிது நேரம் கழித்து 'காலையில, வீட்டுல என் வீட்டுக்காரியோட தொல்ல தாங்க முடியல.ஒரே அர்ச்சனை! உனக்கு தான் தெரியுமே, அவ பேச ஆரம்பிச்சுட்டா நிறுத்தவே மாட்டான்னு, இன்னைக்கு கொஞ்சம் அதிகம். உள்ளுக்குள்ளேயே இருந்த கோபம் இப்ப கொட்டிடுச்சு, மன்னிச்சிருடா! எனக்கே கஷ்டமா தான் இருக்கு' என்றார்.
நான் சிந்தித்து பார்த்தேன். இப்படித் தான் சில சிறிய வினாடிகளில் நாம் நமது சுய அறிவை இழந்து எத்தனையோ தவறுகள், அதுவும் நம்மையும், பிறரையும் வெகுவாக பாதிக்கும் செயல்களை செய்து விடுகிறோம். அது தவறு என்று உண்ர்ந்தாலும் காரியம் தான் முடிந்து விட்டதே? வருந்தினாலும் பயன் இல்லையே? தாங்க்ள் பொறுமை இழக்கும் முன் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே! நீங்கள் உங்கள் முகத்தை இழ்க்கப் போகிறீர்கள் என்று.
- விபாகை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment