எனக்கு பிடித்த நாலு விசயங்கள்
பிடித்த 4 நபர்கள்:
1. அம்மா
2. என்னுள் உறைந்திருக்கும் ...........
3. என் அன்பு மனைவி
4. என் அன்பு மகள்
இருந்த 4 இடம்:
1. அருப்புக்கோட்டை - (பிறந்தது)
2. மதுரை - (சுற்றியது)
3. சென்னை - (வாழ்வை அறிந்தது)
4. பெங்களூர் - (வாழ்வை தேடித் தேடி...)
பிடித்த 4 இடம் :
1. அருப்புக்கோட்டையில் என் அம்மாவின் மடி
2. மதுரையில் டவுன்ஹால் ரோடு
3. சென்னையில் மெரினா பீச் - வாழ்வின் முடிவையும் ஆரம்பத்தையும் நான் இங்கே தான் உணர்ந்து கொண்டேன்
4. திருவண்ணாமலை - கோவில் ஆஹா என்ன அமைதி
போக விரும்பும் 4 இடம்:
1. இமாலய மலை அடிவாரம் - ரிஷிகள் இருப்பாங்களாமே?
2. சிங்கப்பூர் - சுறுசுறுப்பான அந்த மக்களைப் பார்க்கணும்
3. இராமேஸ்வரம்
4. கேரளா படகுகுடில்
பிடித்த, போக விரும்பும் 4 விடுமுறை இடம்:
1. கொடைகானல்
2. ஊட்டி
3. சிம்லா
4. குற்றாலம்
பிடித்த 4 உணவு:
1. பரோட்டா - குருமா (எங்க ஊருல இது பேமஸ்பா)
2. பூரி
3. கோழி வகைகள்
4. கடலை மிட்டாய் (ஐய் ..... எனக்கு ரொம்ப புடிக்கும்)
பிடித்த 4 விலங்கு:
1. புலி - என்ன லுக்கு தெரியுமா?
2. நாய்
3. பூனை
4. யானை.
பிடித்த 4 பறவை:
1. மயில்
2. புறா
3. பச்சைக் கிளி
4. காதல் பறவை ( லவ் பேர்ட்ஸ் தான்...)
பிடித்த 4 படம்:
1. தெய்வ மகன்
2. சலங்கை ஒலி
3. அன்பே சிவம்
4. டைட்டானிக்
பிடித்த 4 நடிகர்:
1. சிவாஜி (வேற யாரா இருக்க முடியும்)
2. கமல்
3. நாசர்
4. ரகுவரன்
பிடித்த 4 நடிகை:
1. சிம்ரன்
2. ஜோதிகா
3. மீரா ஜஸ்மின்
4. ....... (இது இன்னும் காலியாகத் தான் உள்ளது)
சந்தோசமான 4 நிகழ்வுகள்:
1. என் மகள் பிறந்தவுடன் கைகளில் வாங்கிய அந்த இளகாலை வேளை]
2. ஒவ்வொரு ஓவியம் முடியும் போதும் ஏற்படும் திருப்தி
3. எனது கனணி மையம் மாவட்டத்தின் சிறந்த் மையமாக அறிவிக்கப்பட்டது
4. என் மகள் இந்த வருடம் பள்ளியில் சிறந்த மாணவியாக (ஆல்ரவுண்டர்) திடீர் என மேடையில் அருவித்த போது (அவர்கள் பள்ளியி எப்போதும் அப்படித் தான் அறிவிப்பது வழக்கம்)
பிடித்த 4 விசயங்கள்:
1. அடுத்தவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு தீர்வு சொல்வது... (நம்மல.. யாரும் கேட்க மாட்டேன்கிறாங்கப்பா)
2. நபர்களை ஆராய்வது (reading a person)
3. நிழற்படம்
4. வரைபடம்
என்னிடம் இருக்கும் எனக்கே பிடிக்காத 4 விசயங்கள்:
1. கோபம்
2. கோபம்
3. கோபம்
4. கோபம்
சோகமான 4 விசயங்கள்:
1. கும்பகோணம் தீ விபத்து
2. சுனாமி
3. என் பள்ளி நாட்களில் இறந்து போன என் உயிர் நண்பன் - கண்ணன்.
4. நான் பார்த்திராத என் தந்தை முகம் (நான் ஆறு மாத குழந்தையாக இருந்த போது என் தந்தை மரணம் அடைந்து விட்டார்.)
பிடித்த 4 நண்பர்கள்:
1. எஸ். எஸ். சுகுமாரன் (எலும்பு சிகிச்சை நிபுணன்)
2. தங்கபாண்டியன் (கார்பன் பேப்பர் தொழில்சாலை வைத்திருக்கிறான்)
3. பழனிக்குமார் (ஆசிரியன்)
4. அனைத்து நண்பர்கள்(முக்கியமாக வலை நண்பர்கள்)
அவ்வளவு தாங்க..... வேற என்ன எழுத.....
சரி சரி நீங்களும் தான் இது மாதிரி ஏதாவது எழுதுங்களேன்...
- விபாகை
2 comments:
நண்பர் விபாகை,
இன்று தான் உங்க வலைப்பக்கம் வந்தேன்.
நீங்க சொன்ன நான்குகளில் 90% எனக்கும் பொருந்துது.
நன்றி தோழரே,
ஒருமித்த கருத்துடையோர் எங்கிருந்தாலும் காலத்தில் இணைவார்கள் என எங்கோ படித்த ஞாபகம்...
Post a Comment